நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது
குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், திமுக தலைவர் கருணாநிதிக்கும்,
அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் மேற் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களாவன :

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் வரவிருக்கின்ற 16வது நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அந்தத் தேர்தலில் கழகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். மேலும் எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கத் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கும் அதிகாரம் வழங்குவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 2
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று கருணாநிதி தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எவ்வாறு சேது சமுத்திரத் திட்டத்திற்கு மூடு விழா நடத்த எண்ணுகிறார்களோ - எப்படிப் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மூன்றாண்டுக் காலமாக இழுத்து மூடி வைத்திருக்கிறார்களோ - பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களோ - எப்படி செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும், பாவேந்தர் ஆய்வு நூலகத்தையும் சரியாக இயங்கவிடாமல் செய்திருக்கிறார்களோ - அதைப் போலவே இந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்திட அ.தி.மு.க. ஆட்சியினர் நினைக்கிறார்கள்.
மதுரவாயல் - துறைமுகம் சாலையை நம்பி, ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்க திட்டமிட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சென்னை துறைமுகம்; திருப்பெரும்புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய “கண்டெய்னர் டெர்மினலை” அமைக்க திட்டமிட்டிருந்தது. மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதுபோலவே தேசிய நெடுஞ் சாலைத் துறையைச் சார்ந்த 9,300 கோடி ரூபாய்க்கான 1,037 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைத் திட்டங்கள் பல காரணங்களால் தாமதிக்கப்பட்டுள்ளதாம்!
திண்டுக்கல் - தேனி - குமுளி சாலையை அகலப் படுத்தும் திட்டம் இன்னும் முடியவில்லை. 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலைத் திட்டம் இந்த மாதத்திற்குள் முடிவடைந்திருக்க வேண்டும். சென்னை - திருப்பதி சாலையை அகலப்படுத்தும் திட்டம், ஆந்திர மாநிலப் பகுதியில் பணி முழுமை பெற்று விட்டது; ஆனால் தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கும், மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த வேறுபாடான நிலை காரணமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற திட்டங்களும், 1,745 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைப் பணிகளும் குளறுபடியிலே உள்ளன.
காலதாமதம் காரணமாக எந்தெந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால், அக்டோபர் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை - திருப்பதி சாலை; அக்டோபர் 2011இல் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை - தடா சாலை; ஜூன் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய எண்ணூர் மணலி சாலை அபிவிருத்தி திட்டம்; செப்டம்பர் 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்; மே 2013இல் முடிவடைந் திருக்க வேண்டிய திருச்சி - காரைக்குடி சாலைத் திட்டம்; டிசம்பர் 2013இல் முடிவடைந்திருக்க வேண்டிய கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் சாலைத் திட்டம் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மேற்கண்ட திட்டங்கள் தமிழகத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி இலட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா அரசு இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்காமல் இருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கினை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:
Post a Comment