News Update :

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பகல் கனவு காண்கிறார்

Friday, August 16, 2013

நமது நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பகல்கனவு காண்கிறார் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குஜராத் முதல்வராக பதவிவகிக்கும் நரேந்திரமோடி, நமது நாட்டின் பிரதமராக பகல்கனவு காண்கிறார். இந்த பகல் கனவு நனவாகாது. பிரதமர் மன்மோகன்சிங்கின் சுதந்திரதின உரையை நரேந்திரமோடி கடுமையாகவிமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமர் போன்ற பெரிய பதவிவகிப்பவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டால், பிரதமராகிவிடமுடியும் என்று நரேந்திரமோடி கருதுகிறார்.
நமதுநாட்டில் வளர்ச்சிப்பணிகளில் குஜராத் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி பொய்யான தகவலை கூறிவருகிறார். மத்திய திட்டக்குழுவின்படி, வளர்ச்சிப்பணிகளில் குஜராத் மாநிலம் 10-12-ஆவது இடத்தில் உள்ளது. வளர்ச்சிப்பணிகளில்  கேரளம், மகாராஷ்டிரம், ஹரியாணா முன்னணி மாநிலங்களாக உள்ளன. வெற்றுப்பேச்சுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டுவர நரேந்திரமோடி பாடுபட வேண்டும்.

சுதந்திரதினத்தன்றே பிரதமரின் உரையை விமர்சித்த உதாரணங்கள் நமது நாட்டில் இருந்ததில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் உரைக்கு சுதந்திரதினவிழா உரையில் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பாஜக மூத்தத்தலைவர் அத்வானியே கருத்து தெரிவித்திருக்கிறார். நரேந்திரமோடியின் நடவடிக்கை யோக்கியமானதாக இல்லை.
பெங்களூரு ஊரகம் மற்றும்மண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் சித்ரதுர்கா, தார்வாட், மைசூர் ஆகிய 3 சட்டமேலவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிவாகைச்சூடவுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நிலவும் சூழலை கவனித்தால், காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளதை உணரலாம். இத்தொகுதிகளில் 2 நாள்களுக்கு பிரசாரம் செய்யவிருக்கிறேன் என்றார் அவர். பேட்டியின்போது கட்சியின்மூத்தத்தலைவர்கள் அல்லம்வீரபத்ரப்பா, உக்ரப்பா, கே.சி.கொண்டையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.