News Update :

சந்தைக்கு வந்த ஹோண்டாவின் புதிய 110 சிசி ட்ரீம் நியோ பைக்

Tuesday, August 13, 2013


ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மிகவும், எதிர்பார்க்கபட்ட ட்ரீம் சீரிஸ் வகை மோட்டார் சைக்கிளின் 110 சிசி ட்ரீம் நியோவை, சென்னையில் ட்ரீம் கார்னிவல் 2013 ஆகஸ்ட் 2ம் தேதி அறிமுகப்படுத்தியது.
ஹோண்டாவின் ட்ரீம் நியோ, இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிராத, மிகவும் விலை குறைந்த மற்றும் எரிபொருள் சிக்கனம் உடைய, இருசக்கர வாகனமாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 74 கி.மீ., வரை செல்லும் இதன் திறனுடன், மிகவும் சக்தி வாய்ந்த, சிறந்த செயல்திறன் உள்ளடக்கிய திருகுவிசை மற்றும் புரட்சிகரமான ஹோண்டா சுற்றுச்சூழலுக்கு, இணக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது ட்ரீம் நியோ.
ட்ரீம் நியோவில், மிகவும் சக்திவாய்ந்த செம்மைபடுத்தப்பட்ட 110 சிசி ஏர் கூல்ட் 4ஸ்ட்ரோக் எஸ்ஹோல் இன்ஜினாகும். ஹோண்டா ஈகோ செக்னாலஜியின் அடிப்படையில், மேம்படுத்தப்பட்ட பில்டன் திறனையும், கம்பஷன் சேம்பரையும் ஒருங்கிணைத்திருக்கிறது. இதனால் எரிபொருள் திறனையும், கம்பரஷன் விகிதத்தையும் அதிகரித்து, எடை நிலைகளுக்கு தகுந்த மாதிரி செயல்படும் இன்ஜின் கட்டுப்பாடு மற்றும் சிறந்த ஆற்றல் வெளிப்பாடும், திறனும் பெறப்படுகிறது.

ட்ரீம் நியோவில் உச்ச ஆற்றலாக 8.25பிஎச்7,500 ஆர்.பி.எம்., யிலும் மற்றும் சிறந்த இழுக்கும் விசையாக (டார்க்) 8.63 என்எம் 5,500 ஆர்.பி.எம்.,யிலும் கிடைக்கிறது.
ட்ரீம் நியோவின் சிறந்த வடிவமைப்பிற்கு காரணமாக, அதன் டேங்கின் மேல் உள்ள ட்யூவல் டோன் கிராபிக் ஸ்டிக்கர்கள், முன்புற ஏரோ டைனமிக் கவுலுடன் கூடிய பக்கவாட்டுப் பேனல்கள், கறுப்பு வண்ண ஆறு ஸ்போக்கன் கொண்ட அலாய் வீல்கள், நேர்த்தியான சைலன்சர் மற்றும் பிரகாசமான பின்புற விளக்கு போன்றவைகளைக் கூறலாம்.
இந்திய சாலைகளுக்கு ஏற்ற, சிறந்த சஸ்பென்ஷன் 5 நிலையில் மாற்றிக் கொள்ளக்கூடிய நேராக, அமரக்கூடியதாகவும் நீண்ட வசதியான இருக்கை, அகன்ற கைப்பிடி ஏற்றுக் கோணத்தின் விளைவாக, மிகச்சிறிய சுற்று ஆரத்தில், எளிதாக திரும்பக் கூடிய வசதி, சாலையில் டயருக்கு ஸ்திரத்தன்மை கொடுத்தால், 1,258 மிமி வீல்பேல் போன்றவை ட்ரீம் நியோவின் பயணத்தை சுகமாக்குகிறது. ட்ரீம் நியோ மூன்று மாடல்களில், டேட்யூவல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 44,319 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் சென்னை) என்று துவங்குகிறது.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.