News Update :

தங்கம் வெள்ளி இறக்குமதி குறைந்தது

Tuesday, August 13, 2013

புதுடில்லி:இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், 290கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 440கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இவற்றின் இறக்குமதி, 34 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அர”, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இதன் பயனாக, சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி சரிவுஅடைந்துள்ளது.எனினும், கடந்த ஜூன் மாதத்தில், தங்கம், வெள்ளி இறக்குமதி, 245கோடி டாலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, இவற்றின் இறக்குமதி அதிகரித்தே (290கோடி டாலர்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜன.,-மே) முறையே, 740கோடி டாலர், 570கோடி டாலர், 330கோடி டாலர், 750கோடி டாலர், 840கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
சென்ற ஜூலையில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி குறைந்துள்ளதை அடுத்து, அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உலகளவில், தங்கம் இறக்குமதியில், நம்நாடு முன்னிலையில் உள்ளது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டுதேவையை ஈடு செய்ய, 830 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.