அதிரடியாக தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள காமெடி கிங்
கவுண்டமணி, அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவற்றில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்!
சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், தமிழ் சினிமாவிலும்,
தொலைக்காட்சிகளிலும் கவுண்டமணியின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருப்பதைக்
காணலாம்.
தொலைக்காட்சிகளில் சரி... சினிமாவில் எப்படி என்கிறீர்களா... அதான்
சந்தானம் இருக்காரே... அவரது ஒவ்வொரு வசனங்களிலும் அதை உச்சரிப்பதிலும்
கவுண்டரை அப்பட்டமாகக் காணலாம்.
இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. 12
படங்களில் ஹீரோவாக நடித்து, அவற்றில் சில படங்கள் நூறு நாட்களையும்
தாண்டின. பல படங்களில் ஹீரோ என வேறு யார் பெயர் இருந்தாலும், கவுண்டர்தான்
படத்தின் நிஜ நாயகனாக ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.
இடையில் எத்தனையோ படங்களில் வாய்ப்புகள் வந்தும் அவர் எதையும் ஒப்புக்
கொள்ளவில்லை.
தங்கம் படத்துக்குப் பிறகு இப்போதுதான், சாந்தனுவுடன் 'வாய்மை' என்ற
படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி.
அதைத் தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
கெளதம் மேனனிடம் உதவி
இயக்குநராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்திற்கு '49ஓ' என பெயர் வைத்திருக்கிறார்கள். இதில், விவசாயி
கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. அவருடன் சத்யன், விடிவி கணேஷ்,
சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கிறார்கள். இது விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசும்
படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெற்றி மாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கவுண்டமணி ஒப்புக்
கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment