News Update :

தே.மு.தி.க-விலிருந்து பறக்கப்போகும் மூத்த தலை உறுப்பினர்

Tuesday, August 13, 2013

சென்னை: தேமுதிகவில் விஜயகாந்துக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மூத்த தலைவர் அக்கட்சியை விட்டு விலகி முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
 தமிழக சட்டசபையில் தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களில் 6 பேர் ஏற்கெனவே அதிமுக ஆதரவு அணிக்குப் போய்விட்டனர். மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜ், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி அருண்பாண்டியன், செங்கம் தொகுதி சுரேஷ்குமார், சேந்தமங்கலம் சாந்தி, விருதுநகர் மா.ஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பகிரங்கமாக விஜயகாந்தை விமர்சிக்கவும் செய்தனர். 
 
 இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அடுத்த இடத்தில் உள்ளவரும் அரசியலில் பழுத்த பழமாக இருப்பவரும் கூட விரைவில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசக் கூடும் எனத் தெரிகிறது. தொடக்கத்தில் கட்சியில் மிகவும் நல்ல மரியாதை கிடைத்தது. ஆனால் நாளடைவில் மரியாதை மங்கிப் போனதாம். இவரது அரசியல் ஆலேசனைகள் அனைத்தும் புறக்கணிப்படுகின்றதாம். இதனால் இவர் மனம் வெறுத்துப் போய் கடந்த சில நாட்களுக்கு முன்பே அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உடனே மறுப்புகள் வெளியாகின, இருப்பினும் தேமுதிகவை விட்டு ஜூட் விடும் முடிவுக்கு அந்த தலைவர் வந்துவிட்டாராம். தமது ஆதரவாளர்கள் சிலரிடம் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் இவரும் தொகுதி நலன் குறித்து பேச முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளாராம். அப்படி செல்லும் போது, தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரையும் அழைத்துச் செல்ல உள்ளராம்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.