அகமதாபாத்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 7 புதிய மாவட்டங்களை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் அமுல் படுத்த முடிவு செய்துள்ளது
குஜராத் அரசு.
ஏற்கனவே குஜராத்தில் 26 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், தேர்தல்
சுற்றுப்பயணத்தின் போது ‘ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்களை
உருவாக்குவோம் என அறிவித்திருந்தார் மோடி. அதன் படி வெற்றி வாகை சூடி
தற்போது முதலமைச்சராக வீற்றிருக்கும் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றிடும் பொருட்டு, புதிய மாவட்டங்களை உருவாக்கும் முயற்சியில்
இறங்கினார்.
அதனடிப்படையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளைப்
பெற்று மாநில தலைமை செயலாளாரின் கண்காணிப்பில் இந்தக் குழு எடுத்த முடிவின்
அடிப்படையில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
அம்மாவட்டங்களுக்கு ஆரவல்லி, போடாட், சோட்டா, உதய்பூர், மோர்பி, மஹிசாகர்,
கிர் - சோம்நாத், துவாரகா என பெயரிடப்பட்டுள்ளது. நாளை 67வது சுதந்திரதினம்
கொண்டாடப்பட உள்ள வேளையில் இந்த புதிய மாவட்டங்கள் குறித்தான அறிவிப்பு
அமல் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிய மாவட்டங்களின் வருகையால் குஜராத் மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக
உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment