News Update :

கபில் தேவின் இந்திய அணியில் தோனியே கேப்டன்

Friday, August 16, 2013


தற்போதுவரை இந்திய கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் கொண்ட ஒரு சிறந்த அணியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் உருவாக்கினார். அந்த அணியின் கேப்டன் பதவியை தோனியே பிடித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கபில் தேவிடம் சிறந்த இந்திய அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டது. அப்போது அவர் தேர்வு செய்த அணியில், தோனியைக் தவிர்த்து சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், அசாருதீன், யுவராஜ் சிங், விராட் கோலி, கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், ஜாஹீர் கான் மற்றும் 12-வது வீரராக ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்தனர்.
ஆனால், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் ஒருவர் கூட கபில்தேவின் அணியில் இடம் பிடிக்கவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில், தேர்வு செய்துள்ள 12 வீரர்களைக் கொண்ட அணி சிறந்த அணி. எனது கருத்திலிருந்து மற்றவர்கள் மாறுபடலாம். இது எனது சொந்தக் கருத்துதான் என்று தெரிவித்தார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.