News Update :

உலக செஸ் கோப்பை: சசிகிரண் டிரா

Friday, August 16, 2013

உலக செஸ் கோப்பை போட்டியின் 2-வது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் சசிகிரண் டிரா செய்தார்.
2013-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை செஸ் போட்டி, நார்வேயின் டாம்úஸா நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 128 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ணன் சசிகிரண், பாஸ்கரன் அதிபன், பி.ஆகாஷ் மற்றும் பரிமர்ஜன் நெகி ஆகிய 4 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 7 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியைத் தவிர மற்ற சுற்றுகள் ஒவ்வொன்றிலும் இரு ஆட்டங்ள் நடைபெறும். முதல் சுற்றில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சசிகிரணும், அதிபனும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். 2-வது சுற்று ஆட்டம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இச்சுற்றின் முதல் ஆட்டத்தில் செர்ஜி கர்ஜாகினுடன், சசிகிரண் டிரா செய்தார். இந்த ஆட்டம் 44 நகர்தலில் டிராவானது.
மற்றொரு இந்திய வீரரான அதிபனும், பிரேசிலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஃபியருடன் டிரா செய்தார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.