உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 3,000 மீ.
ஸ்டீபிள்சேஸ் போட்டியில் கென்ய வீரர் இசெகில் கெம்போய் மூன்றாவது முறையாக
உலக சாம்பியனானார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான வியாழக்கிழமை ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ், ஆடவர் மற்றும் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், மகளிர் மும்முறைத் தாண்டுதல், ஆடவர் உயரம் தாண்டுதல் மற்றும் மகளிர் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
கென்யாவுக்கு "2 பதக்கம்':
கென்ய நாட்டு ரசிகர்கள் ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். நடப்புச் சாம்பியன் கெம்போய் மீதான எதிர்பார்ப்பே இந்த ஆவலுக்குக் காரணமாகும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறிதும் ஏமாற்றாத கெம்போய், சொல்லி வைத்தாற்போல் இம்முறையும் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர், பந்தய தூரத்தை 8 நிமிடம் 6.01 விநாடிகளில் கடந்து தொடர்ந்து 3-வது முறையாக உலக சாம்பியனானார். அவரைத் தொடர்ந்து 8 நிமிடம் 6.37 விநாடிகளில் வந்த கென்யாவின் கன்செஸ்லஸ் கிப்ருடோ வெள்ளிப் பதக்கத்தையும், பிரான்ஸ் வீரர் மெக்கிஸ்ஸி 8 நிமிடம் 7.86 விநாடிகளில் வந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களும் கென்யாவுக்கு கிடைத்ததால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததனர்.
தங்கம் வென்ற கெம்போய், தனக்கே உரித்தான பாணியில் நடனமாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். வெற்றிக்குப் பின், "தனது வெற்றியை கென்யாவின் அதிபர் உகுரு கென்யாட்டாவுக்கு அர்ப்பணிக்கிறேன்' என்று உடையில் எழுதப்பட்டிருந்ததைக் காண்பித்து தனது நன்றியைத் தெரிவித்தார். வெள்ளிப் பதக்கம் வென்ற கிப்ருடோ, கெம்போயை தூக்கி தனது வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.
இதற்கு முன், 2009-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியிலும், 2011-ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற போட்டியிலும் கெம்போய் தங்கம் வென்றிருந்தார். இது தவிர 2004 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், இதேபிரிவில் இவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
1,500 மீட்டர்: மகளிர் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அபெபா அர்கெவி 4 நிமிடம் 2.67 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஜெனீஃபர் சிம்ப்சன் வெள்ளிப் பதக்கத்தையும், கென்யாவின் ஹெல்லென் அன்சான்டோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
உயரம் தாண்டுதல்: ஆடவர் உயரம் தாண்டுதலில் உக்ரைன் வீரர் போடன் போந்தரென்கோ தங்கப் பதக்கமும், கத்தாரின் பர்ஷி வெள்ளிப் பதக்கமும், கனடாவின் டெரக் ட்ரோயின் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் மும்முறைத் தாண்டுதலில் கொலம்பியாவின் இப்ரகுவென் தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப் பந்தயத்தின் ஆடவர் பிரிவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ வீரர் கோர்டனும், மகளிர் பிரிவில் செக் குடியரசின் ஹெஜ்னோவாவும் தங்கப் பதக்கம் வென்றனர்.
உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள்
ஆண்டு இடம் பதக்கம்
2013 ரஷியா தங்கம்
2011 தென் கொரியா தங்கம்
2009 ஜெர்மனி தங்கம்
2007 ஜப்பான் வெள்ளி
2005 ஃபின்லாந்து வெள்ளி
2003 பிரான்ஸ் வெள்ளி

0 comments:
Post a Comment