பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கிற்கு, சர்ச்சையிலும், பரபரப்பிலும்
சிக்குவது புதிய விஷயமல்ல. ஆனால், இப்போது பரபரப்பில் சிக்கியுள்ளது, வீணா
மாலிக் அல்ல; அவர் நடித்துள்ள புதிய கன்னடப் படம். மறைந்த நடிகை சில்க்
ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சில்க் சக்கத் ஹாட் என்ற பெயரில்,
ஒரு கன்னட படம் தயாரானது. இதில், சில்க்காக நடித்திருப்பது, வீணா மாலிக்.
இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி, கர்நாடகாவில் உள்ள
சில அமைப்புகள், போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள கோர்ட்,
இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது, இதனால் ஏமாற்றத்தில்
இருக்கிறார், வீணா.
0 comments:
Post a Comment