News Update :

நியூசிலாந்தில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Friday, August 16, 2013

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆரம்பக்கட்டத்தில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வீதியில் நின்றுவிட்டனர்.
நியூசிலாந்தின் தெற்குத் தீவின் வடக்கு முனைப் பகுதியில்  10 கி.மீ. ஆழத்தில் 6.0 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை அனைத்து ரயில் பாதைகளையும் சோதனை இட்ட பிறகே ரயில் சேவை தொடங்கும் என்று தெரிவித்தது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.