News Update :

வெங்காய ஏற்றுமதிக்கு தாற்காலிகத் தடை

Friday, August 16, 2013

உள்நாட்டு நுகர்வோரின் நலன் கருதி வெங்காய ஏற்றுமதிக்கு உடனடியாக தாற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருவதால் உள்ளூர் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே விலைக் கட்டுப்படுத்த இந்த விவகாரத்தில்
உடனே தலையிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தாற்காலிகமாக நிறுத்த வேண்டும்.
கடந்த இரு மாதங்களாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அப்போது ரூ.19 விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.50-60 வரை விற்கப்படுகிறது.
எரிபொருள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வில் சிக்கித் தவிக்கும் சாதாரண மக்களுக்கு இதனால் மேலும் சுமை ஏற்பட்டுள்ளது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவில் நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசு நியாய விலைக் கடைகளில் ரூ.46-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது. ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயத்தை அந்தக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.