News Update :

தனுஷின் 25வது படம் ‘வேலையில்லா பட்டதாரி’

Friday, August 16, 2013

தனுஷ் நடிக்கவிருக்கும் 25வது படத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என பெயர் வைத்திருக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாரளரான வேல்ராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், பொல்லாதவன், சிறுத்தை, ஆடுகளம், 3, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.
படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான மற்ற நட்சத்திரத் தேர்வுகள் நடந்து வருகின்றன.


Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.