News Update :

இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது

Friday, August 16, 2013

புதுடில்லி: சுதந்திர தின விடுமுறைக்கு பின்னர் இன்று காலை துவங்கிய பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து விழுந்தது. மா‌லை வர்த்தக நேர முடிவில் 769 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தை குறியீட்டு புள்ளிகள் 18 ஆயிரத்து 598 புள்ளிகளாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையுற்றனர். அதே போல் இந்திய ரூபாயின் சர்வதேச மதிப்பும் இது வரை இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்தது. ஆனால் தங்கம் விலை மட்டும் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) ரூ.62 எனும் புதிய உச்ச நிலை சரிவை சந்தித்தது. வாரத்தின் கடைசி நாளான இன்று 10காசுகள் உயர்வுடன் ரூ.61.33 தொடங்கிய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தது. காலை 10.30 மணியளவில் ரூ.62-க்கு சரிந்தது. இதற்கு முன் கடந்தவாரம் ரூ.61.80-ஆக சரிந்து இருந்ததே உச்சநிலை சரிவாக இருந்த நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி‌யால் இந்திய பங்கு சந்தையும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குசந்தை 10.35 மணியளவில் 500 புள்ளிகளும், நிப்டி 5,600-க்கும் கீழும் சென்றது. மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது. இதனால் வங்கித்துறை பங்குகள் குறைந்தன.




தங்கம் விலை உயர்ந்தது:
இதற்கிடையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ஆயிரத்து 24 உயர்ந்து ரூ.23, ஆயிரத்து 232 ஆனது. கடந்த வாரத்தில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு வரியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது, இதன் தாக்கம் காரணமாக இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கலாம் என தெரிகிறது. சமீப காலமாக இந்திய பொருளாதாரம் கீழ்நோக்கி சென்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

வெள்ளின் விலை:

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.4.40 காசுகள் உயர்ந்து, ரூ.55.00-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.4,085 உயர்ந்து ரூ.51,385-க்கும் விற்பனையாகிறது.பிரதமர் அவசர ஆலோசனை: இன்று வர்த்தக நிலை அதலபாதாளத்திற்கு சென்றதை அடுத்து பிரதமர் மன்மோகன்சிங் , நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.