News Update :

தங்கம் விலை உயர்வு

Friday, August 16, 2013

புதுடில்லி: இந்தியாவின் தங்கம் பயன்பாடு, 310 டன்னாக அதிகரித்து உள்ளது. இது கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.


வரி உயர்வு:
மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், இவற்றின் இறக்குமதி மீதான வரி, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 338 டன்னாகவும், பயன்பாடு, 181.10 டன்னாகவும் இருந்தது. பயன்பாட்டை விட, தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், இதன் விலை சரிவடைந்திருந்தது.

இதுகுறித்து, உலக தங்க கவுன்சில் (இந்தியா) நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டின் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், தங்கத்தின் விலை சரிவடைந்திருந்ததை அடுத்து, ஆபரணங்களுக்கான தேவை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 188 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலாண்டுகளில், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான பயன்பாடும், 56.5 டன்னிலிருந்து, 122 டன்னாக அதிகரித்து உள்ளது.



தேவை:
நடப்பாண்டின் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, 310 டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 71 சதவீதம் அதிகமாகும். நடப்பாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 900 - 1,000 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.



கடத்தல் தங்கம் உஷார்...:
இறக்குமதி வரி உயர்வால், தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால், விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச எல்லை பகுதிகளில், தங்கம் கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் இருந்து வரும், சந்தேகத்திற்கு இடமான சரக்கு பெட்டகங்கள், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுகளில் உள்ள, சுங்கத் துறையின் அயல்நாட்டு புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் சரக்குகள் குறித்து, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். நிதி, சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகளும், கடத்தல் தங்கத்தை தடுக்க, விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.